search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க ஆதரவு படைகள்"

    சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டனர். #Syria #ISCounterAttacks #USBackedFighters
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சிரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்தில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்காக தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐஎஸ் பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

    அவ்வகையில், அல் பஹ்ரா மற்றும் கரானிஜ் கிராமங்கள் மற்றும் சிரிய ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள அல் தனக் எண்யெய் வயல் அருகில் சனிக்கிழமை முதல் ஐஎஸ் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #Syria #ISCounterAttacks #USBackedFighters
    சிரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. #ISAttack #Syria
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    கிளர்ச்சியாளர்களில் சிலர் அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.
     
    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. #ISAttack #Syria
    ×